குமரன்தாஸ்
Thursday, 27 October 2022
மனிதர்களும் கொண்டாட்டமும்
Friday, 21 October 2022
தமிழ்ச் சினிமா~பாகுபலி முதல் பொன்னியின் செல்வன் வரை மீண்டும் பொ(க)ற்காலம் நோக்கி!
நடுநிலையும் பார்ப்பனர்களும்!
திராவிட இயக்க அரசியல் வெறுப்பு அரசியலா?
பார்ப்பனர்களது சமூக அரசியல் கண்ணோட்டம் எப்போதும் பிறர் மீதான வெறுப்பையே அடித்தளமாகக் கொண்டு இயங்குவதை நாம் அறிவோம்.
ஆனால் அந்தப் பார்ப்பனர்களை விலக்கி கட்டமைக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாத இயக்கத்தின் அரசியலோ அனைவரின் மீதான விருப்பு என்பதாகவே அமைந்திருந்தது வரலாற்று முரணும் உண்மையுமாகும்.
ஆம் திராவிட இயக்கத்தின் அரசியல் எப்போதும் விருப்பு அரசியல் ஆகும். இன்று இதன் மறுபெயர் inclusive policy என்பதாகும். இதுதான் பார்ப்பனியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையிலான அடிப்படை வேறுபாடாகும்.
நம்மை காலங்காலமாக ஒடுக்கியவர்களையும் வெறுத்து ஒதுக்கியவர்களையும் சுரண்டியவர்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி பற்றிச் சிந்திப்பதுதான் திராவிடச் சிந்தனை முறையாகும்.
ஒருபோதும் பழிவாங்கும் அரசியலை திராவிட இயக்கம் மேற்கொண்டதில்லை என்பதும் பார்ப்பனியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையிலான மிக முக்கியமான வேறுபாடுகளில் ஒன்றாகும்.
அவ்வாறாயின் ஏன் பார்ப்பனர்களை விலக்கி பார்ப்பனரல்லாதார் என்ற பெயரில் இயக்கம் அமைத்தனர்? என்ற கேள்வி எழலாம். தொடர்ந்து இன்று வரை திராவிடர் கழகத்தில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளில் பார்ப்பனர்களை இணைத்துக் கொள்ளாமல் ஏன் விலக்கி வைக்கின்றனர்? என்ற கேள்வியும் எழுப்பப்படலாம்.
பார்ப்பனியத்தை வீழ்த்தி ஓர் சமத்துவ சமூகத்தைப் படைப்பதற்கு, பார்ப்பனியத்தைப் படைத்தவர்களும், பார்ப்பனியத் தத்துவத்தால் நூறு சதவீதம் பயன் அடைபவர்களும் இன்றுவரை தொடர்ந்து பார்ப்பனியத்தைக் கட்டிக் காக்கப் போராடுபவர்களுமாக இருப்பவர்களான பார்ப்பனர்களை , பிறப்பால் மட்டுமல்லாமல் சிந்தனையாலும் செயலாலும் பார்ப்பனர்களாக இருப்பவர்களும் அதற்காக பெருமிதம் கொள்பவர்களுமான பார்ப்பனர்களை பார்ப்பனிய எதிர்ப்பு சமத்துவப் போராட்டத்தில் எவ்வாறு இணைத்துக் கொள்ள முடியும்? (பார்ப்பனர்களாகப் பிறந்திருந்தாலும் பார்ப்பனியத்தை எதிர்ப்பவர்களை திராவிட இயக்கம் நண்பர்களாக நடத்திவருவதற்கும் நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு)
அவ்வாறு பார்ப்பனர்களை திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொள்வது கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்துக் கட்டியது போலாகாதா? என்பதால் தான் அவர்களை விலக்கி வைக்க வேண்டியுள்ளது.
மற்றபடி பிரஞ்சுப் புரட்சியின் போது எதிர்ப் புரட்சியாளர்களான மன்னர்களை கொன்றொழித்தைப் போன்றோ, அல்லது ரஷ்ய சோசலிசப் புரட்சியின் போது ஜார் மன்னனையும் பிறகு முதலாளிகளையும் ஒழித்துக் கட்டியது போன்றோ அல்லது சீனாவின் புதிய சனநாயகப் புரட்சிக் காலத்தில் நிலப்பிரபுக்களை அழித்தொழித்தது போன்றோ தமிழ்நாட்டில் ஒரு போதும் திராவிட இயக்கம் பார்ப்பனர்களை ஒரு சதவீதம் கூட நடத்தியதில்லை.
மாறாக அவர்களது நியாயமான நலனையும் உள்ளடக்கி சிந்திக்கவும், அவர்களுக்குரிய பங்கை வழங்கவும் செய்தது தான் திராவிட இயக்க ஆட்சியின் சிறப்பாக இருந்தது. திராவிட இயக்கம் பார்ப்பனர்களின் ஏகபோகமான அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் வன்முறையற்ற வழியில் உடைத்து அனைவருக்கும் அனைத்தும் என்ற சமத்துவக் கொள்கையை நடைமுறைப் படுத்தியது.
இந்த அனைவருக்கும் அனைத்தும் என்ற சமத்துவ , சமூகநீதிக் கொள்கையை எதிர்த்து வழக்குத் தொடுப்பவர்களாகவும் , போராடுபவர்களாகவும், அவதூறு, வெறுப்புப் பிரச்சாரம் செய்பவர்களாகவும் இன்றளவும் பார்ப்பனர்களே உள்ளனர் என்பதை சமகால வரலாறு பதிவு செய்துள்ளது.
இவ்வாறு பிற (பார்ப்பனரல்லாத) ஜாதியினருக்கு (கல்வி,வேலை, அர்ச்சகராகும் உரிமை போன்ற) எதையும் பங்கிட்டுத் தரக் கூடாது என்று வெளிப்படையாக பேசுபவர்களாகவும் அவர்களுக்கு அதற்கான தகுதி இல்லை என்று ஆணவமாகப் பேசக் கூடியவர்களாகவும் பார்ப்பனர்கள் இருப்பதையும் நாம் பார்க்கிறோம்.
இவ்வாறு தங்களைத்தவிர இந்நாட்டில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களை முட்டாள்களாகவும் , இழிபிறவிகளாகவும் இன்றளவும் கருதவும் அறிவிக்கவும் செய்யும் பார்ப்பனர்கள் முன்வைக்கும் (சனாதன) அரசியலே மனிதகுல வெறுப்பு அரசியலாகும்.
மாறாக காலமெல்லாம் தம் மீது நஞ்சைக்கக்கி வரும் பார்ப்பனர்களது நலனையும் மறுக்காமல் அதேசமயம் பெரும்பான்மை பார்ப்பனரல்லாத மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் திராவிட இயக்கம் முன்வைக்கும் அரசியல் மக்கள் விருப்பு அரசியலாகும்!
Tuesday, 14 February 2017
கவிஞர் இன்குலாப்~ஆதிக்க எதிர்ப்பின் அடையாளம்
ghY}l;lr; nrhy;yhjPh;fs;|
Sunday, 4 October 2015
மெட்ராஸ் திரைப்படத்தை முன்வைத்து_சில குறிப்புகள். --- குமரன்தாஸ்
``````````````````````````````````````````````
தமிழ் சினிமாவில் எமக்கான பங்கு ~ மெட்ராஸ் திரைப்படத்தை முன்வைத்து_சில குறிப்புகள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குமரன்தாஸ்
“”””””””””””””””””
சமூகமாற்றம் குறித்துச் சிந்திக்கும், செயல்படும் தோழர்களிடமும், இயக்கங்களிடமும் தமிழ்ச்சினிமாவைக் குறித்து ஓர் தீண்டாமைப் போக்கு காணப்படுவது இங்கு இயல்பான ஒன்றாக இருக்கிறது. தோழர்கள் பலர் ‘ நான் சினிமாப் பார்ப்பதில்லை,’ என முகச்சுழிப்புடன் கூறுவதும், நாங்கள் சினிமா விமர்சனங்களை எங்கள் இதழ்களில் வெளியிடுவதில்லை என்று கூறுவதும் வழமையான ஒன்றாகும்.
சினிமா பார்ப்பதும் அதுபற்றிப் பேசுவதும், எழுதுவதும் இழிவானதும், சமூக மாற்றச் செயல்பாடுகளுக்கு எதிரான சுகபோகம் என்று நம் தோழர்கள் கருதிவருவதுமே இதற்கு காரண்மாகும். மற்றொன்று சினிமா மட்டுமே எளிய மக்களின் பொழுது போக்காகவும், வரலாரை, அரசியலை அவர்களுக்குச் சொல்லித்தரும் சாதனமாகவும் இருந்து வந்துள்ளதாலும் ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக கூடுமிடமாகவும் இருந்து வந்துள்ளதாலும் சினிமாவை. சினிமாக்கொட்டகைகளை மேட்டிமைச்சாதியினர் வெறுத்து ஒதுக்கியும் வந்துள்ளனர்.
ஆனால் எளியமக்கள் தங்களுக்கான கதா நாயகர்களையும் தலைவர்களையும் சினிமாவில் இருந்தே இதுவரைத் தேர்வு செய்து வந்தனர், வருகின்றனர். இதனை விளங்கிக்கொள்ள தோழர்களுக்கு ஒரே ஒரு உதாரணம் மட்டும், இதுவரை தமிழ்த் தேசியம் குறித்து எண்ணற்ற தலைவர்கள் பேசிவந்தபோதும் சீமானுக்கு கூடும் கூட்டம் தியாகுவுக்கோ, மணியரசனுக்கோ கூடுவதில்லை என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். காரணம் சீமான் தமிழ்ச்சினிமாவிலிருந்து வந்தவர் என்பதுதான். இதை யாரும் மறுக்க முடியுமா?.
தந்தை பெரியார் கூட ஒழிக்கப்படவேண்டிய பல வற்றுள் சினிமாவையும் ஒன்றாகக்குறிப்பிட்டுள்ளதாகக்கூறுவர். ஆனால் அவருக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த அண்ணா ‘தணிக்கை செய்யாமல் சினிமா எடுக்கத் தனக்கு அனுமதி தந்தால் ஒரே ஒரு சினிமாவின் மூலம் தமிழக ஆட்சியைப் பிடித்துவிடுவேன்’ என்று கூறியதாக க.திருனாவுக்கரசு தன் நூலில் பதிவு செய்துள்ளார்
தணிக்கையின் காரணமாகவே பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதி 1967ல் ஆட்சியைப் பிடித்தார் போலிருக்கிறது அண்ணா. ஆக, மிக எளிய முறையில் இப்படிக்கூறலாம்; தேர்தல் அர்சியல் காரர்கள் சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், தேர்தலரசியல் வெறுப்பாளர்கள் சினிமாவை வெறுப்பதும் காணப்படுவதாகக் கூறலாம். அதாவது தேர்தல் அரசியலும் சினிமாவும் ஒன்றிலிருந்து ஒன்றைப்பிரித்துக் காணமுடியாதவாறு ஒன்றிப்போய்க்கிடக்கிறது என்று கூறலம்.
ஆனால் உண்மையில், தேர்தல் அரசியல் என்பதோடு மட்டுமல்லாமல் தமிழக மக்களின் பொருளாதார, அரசியல், பண்பாட்டு வாழ்க்கையோடு (பெரிய,சின்ன) திரை பிரிக்கமுடியாத ஒன்றாக கலந்து போய்விட்டது என்றே கூறவேண்டும். (காண்க; திரையின்றி அமையாது உலகு. கட்டுரை~உழைப்பவர் ஆயுதம் ஜூலை 2011) இவ்வாறு தமிழக மக்களின் வாழ்க்கையைத் தீர்மாணிக்கும் காரணிகளில் ஒன்றகிவிட்ட தமிழ்த் திரையை இதுவரை ( 1916 ~2014) பல்வேறு ஆதிக்க சாதிகளும் கைப்பற்றி தங்களது சமூக இருப்பை, அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும், தொடர்ந்து நிலை நிறுத்திக் கொள்ளவும் ஏற்றவிதமான கதைகளையும், கருத்துக்களையும் காட்சிகளாகவும், வசனங்களாகவும் எடுத்து தமிழக மக்களின் மூளைக்குள் திணித்து வந்தனர்.
தமிழகப்பொருளாதாரமும்( நிலம், தொழில் துறை) , அரசியலும்( ஆட்சி,அதிகாரம்) கடந்த காலத்தில் பார்ப்பனர், முற்பட்ட சாதியினர், இடை நிலைச்சாதியினர் என்று கைமாறி வந்ததைப் போலவே தமிழ்ச்சினிமாவும் கைமாறி வந்துள்ளது. இப்படி நாம் கூறும் போது ஒரு குறிப்பிட்ட சாதியினரது அதிகாரம் முற்றிலும் ஒழிந்து, பிரிதொரு சாதியினரது அதிகாரத்தின் கீழ் பொருளாதாரம், அரசியல், சினிமா போன்றவை வந்துவிடுகிறது என்று பொரு ளில்லை. மாறாக அதிகாரத்தில் முழுமுற்றாக ஒரு பிரிவினர் மட்டும் இருந்த நிலையில் வளர்ந்து வரும் மற்றொரு பிரிவினரும் அவர் களோடு அதிகாரத்தை பங்குபோட்டுக்கொள்கிறார்கள் என்றே பொருள்.
இவ்வாறுதான் பார்ப்பனர்கள் மட்டுமே முற்றாக இடம்பெற்றிருந்த ஒவ்வொரு துறையிலும் முதலில் பிள்ளைமார்கள், செட்டியார்கள், முதலியார்கள் போன்ற முற்பட்டசாதிகளும் அடுத்து இடை நிலைச்சாதிகளான முக்குலதோர், வன்னியர், கவுண்டர்கள், நாடார், கோனார் போன்றோரும் பங்கு பெற்றனர்.
நாம் தமிழ்ச்சினிமாவில் இதனை இரண்டு அம்சங்களில் காணவேண்டும். ஒன்று தமிழ்ச்சினிமாவைத் தயாரித்த, இயக்கிய, நடித்தவர்களின் சாதிப்பின் புலம், அடுத்து தமிழ்ச்சினிமா முன் வைத்த கதைக்களத்தின் சாதிப் பின்புலம் என்ற இரு நிலைகளில் காண வேண்டும். 1931 ல் வெளிவந்த முதல் பேசும் படமான காளிதாஸ் துவங்கி 1950 வரைப் பார்த்தோமானால் பிற சாதியினரைவிட பார்ப்பனர்கள் அதிகமாகத் தமிழ்ச் சினிமாவில் பங்கு பெற்றதையும் கதைக் களமும் பார்ப்பனப்பின்புலத்தில் அமைந்தி ருப்பதை நாம் அவதானிக்கமுடியும்.
எடுத்துக்காட்டாக அன்று தமிழ்ச்சினிமாவில் பங்குபெற்ற பார்ப்பனர்கள் சிலருடைய பெயர்களை மட்டும் இங்கு குறிப்பிடலாம்; மாதிரி மங்கலம் நடேசய்யர், எஸ்.ஆர்.பத்மா, எஸ். நாராயண அய்யர், சி.வி.ராமன், கே.சுப்ரமணியம்.......... என இன்னும் பலர்.
இக்காலகட்டத் திரைப்படங்களில் என்ன ஓய், அய்யர்வாள் போன்ற விளித்தல்களை, வசனங்களை சர்வ சாதாரணமாக நாம் காண முடியும். அடுத்து வந்த திரைப்படங்களில் பிள்ளைவாள், செட்டியார்வாள், முதலியார்வாள் என்ற விளித்தல்களையும் மாணிக்கம்பிள்ளை, ஆளவந்தார் போன்ற பெரியமனிதர் குடும்பத்து கதைகளையும் நாம் கண்கிறோம்.
இடையே 1970க்குப் பின் மட்டும் மிகப்பிற்பட்ட, தாழ்த்தப் பட்ட சாதி உழைக்கும் மக்கள் பற்றிய காட்சிப் படுத்துதல்கள் நக்சல்பாரி எழுச்சியின் தாக்கம் காரணமாக கொஞ்சம் காணப்படுகிறது. ஆனால் 1985க்குப் பின் இடைனிலைச் சாதிப் பெரிய மனிதர்களது துதிபாடல்கள் துவங்குகிறது. சின்னக்கவுண்டர், எஜமான், நாட்டாமை, சூரியவம்சம் போன்ற கவுண்டர் சாதித்திரைப்படங்களையும் அடுத்து முதல்மரியாதை, தேவர்மகன்,விருமாண்டி,பசும்பொன்,தாஜ்மகால், கிழக்குச்சீமையிலே, சேனாதிபதி போன்ற முக்குலத்தோர் சாதித் திரைப் படங்களும் மறுமலர்ச்சி, சொல்லமறந்தகதை, ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற படையாட்சி கதைகளையும், தாமிரபரணி, சிங்கம் போன்ற நாடார் சாதித்திரைப்படங்களையும் நாம் பார்த்துவிட்டோம். இவை ஒரு சில உதாரணங்கள் தான்.
இதே காலகட்டத்தில் இந்த இடைனிலைச்சாதித் திரைப் படங்களோடு பார்ப்பன முற்பட்டசாதித்திரைப்படங்களும் வந்து போயின. 2000க்குப் பிறகு பிற இடைனிலைச்சாதிகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு முக்குலத்தோர் சாதித்திரைப்படங்கள் மேலாதிக்கம் செய்யத்துவங்கிவிட்டதோடு வெளிப்படையாகத்தம் சாதிப் பெருமை யையும் முன்வைத்தது (சண்டைக்கோழி, மாயாண்டிகுடும்பத்தார், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, தென்மேற்குப் பருவக்காற்று, மதயானைக்கூட்டம்.....) மதுரையைக்கதைக் களமாகக்கூறினாலே அது முக்குலத்தோர் கதை என்றாகியது.
இவ்வாறு நாம் கூறும்போது தாழ்த்தப்பட்டோர் தொடர்பான திரைப்படங்களே தமிழ்ச்சினிமாவில் இல்லையா? என்றகேள்வி எழலாம். தமிழ்ச்சினிமாவின் துவக்ககாலம் முதற்கொண்டே தாழ்த்தப்பட்டோர் கதாபாத்திரங்கள் அவ்வப்போது தலைகாட்டவே செய்தன அவையனைத்துமே மேல் சாதி இந்துக்களது பார்வையில் படைக்கப்பட்ட திரைப்படங்களாகவும், அவர்களது பொருளாதார,அரசியல், பண்பாட்டுச் சட்டகத்தினை மீறாத தாழ்த்தப்பட்ட கதைமாந்தர்களையும் படைத்துக்காட்டினர்( மதுரைவீரன், பாரதிகண்ணம்மா,முதல்மரியாதை, சின்னக்கவுண்டர், கூடல் நகர், தாஸ்,...)
கடந்த நூறாண்டுகளில் தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்த தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்/னடிகைகள், தொழில் நுட்பக்கலைஞர் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொண்ட ஒருவரைக்கூட நாம் தமிழ்த்திரையில் பார்க்கமுடியவில்லை. இதற்குமாறாக பார்ப்பனர்களில் பாலச்சந்தர், சோ, விசு, எஸ்.வி.சேகர் போன்றோர் மிக வெளிப்படையாக தங்களது சாதியடையாளத்துடன் செயல்படுவதும் அதேபோல் சாண்டோ சின்னப்பாத்தேவர், ஓ,ஏ,கே.தேவர் போன்றோர் தமது சாதி அடையாளத்தை பெருமிததோடு திரையில் வெளிப்படுத்திக்கொண்டதும், தேவர் பிலிம்ஸ் என்றே தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயரிட்டுக்கொண்டதையும், ஏ.வி.மெய்யப்பச்செட்டியார் என்று திரையுலகம் பெருமையுடன் அழைத்துவருவதையும் நாம் பார்த்து விட்டோம். சிவாஜி, பாரதிராஜா,மனோஜ்குமார்,ரத்னகுமார், மனோரமாகருணாஸ்,விவேக்,கார்த்திக்,செந்தில் போன்ற பலரும் தங்களது சாதியடையாளத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதும், இவர்களில் பலர் தங்கள் சாதிச்சங்கத்தில் வெளிப்படையாக இயங்குவதும் , அது அவர்களது திரைத்துறை வளர்ச்சியை எவ்விதத்திலும் பாதிக்காததும் நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் தமிழ்த்திரையில் இசுலாமியரும், தாழ்த்தப் பட்டோரும் மட்டும் தங்களது சாதி,மத அடையாளங்களை வெளிப்படுத்திக்கொள்ளமுடியாமல் மறைந்து இயங்கவேண்டிய அவல நிலை காணப்படுகிறது,
இத்தகைய பின்னணியில் தான் மிகச்சமீபகாலமாக இயக்குனர் சுசீந்திரனும், பா.ரஞ்சித்தும் தாழ்த்தப்பட்ட மக்களது வாழ்க்கையை திரையில் காட்சிப்படுத்த முன்வந்துள்ளனர். இதனை நாம் வரவேற்கவும், கொண்டாட வேண்டியவர்களாகவும் இருக்கிறோம். ஏனென்றால் இதுவரை யிலான தமிழ்ச் சினிமாக்கள் தாழ்த்தப்பட்டோர் கதாபாத்திரங்களை காட்சிப்படுத்திவந்த முறையைச் சற்றுத்திரும்பிப் பார்த்தால்தான் இந்தக் கொண்டாட்டத்தில் நீங்கள் பங்குபெறவும் மகிழவும் முடியும். தாழ்த்தப்பட்டோர் கதாபாத்திரங்களை பெரும்பாலான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்களே ஏற்றுள்ளனர். மதுரைவீரனில் என்.எஸ்.கே வும் டி.ஏ.மதுரமும் அருந்ததியர்கள். எம்.ஜி.ஆர் பிறப்பால் அருந்ததியரில்லை அருந்ததியரிடம் வளரும் காசி மன்னன் மகன், மதுரை வீரன் எங்க சாமியில் சத்தியராஜும் அருந்ததியர் வீட்டில் வளரும் பார்ப்பனர். வீரபாண்டிய கட்டபொம்மனில் வீரன் சுந்தரலிங்கமாக நகைச்சுவை நடிகர் ஏ.கருனானிதி நடித்ததன் மூலம் வீரன் சுந்தரலிங்கத்தை காமடியனாக ஆக்கி ஒடுக்கப்பட்டகுல வரலாற்று நாயகரின் பங்கை கொச்சைப்படுத்தினார்கள். இதனை நாம் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வெள்ளையத்தேவன்(ஜெமினி கணேசன்), ஊமைத்துரை (எஸ்.எஸ்.ஆர்) ஆகிய கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ள விதத்தோடு சுந்தரலிங்கனார் பாத்திரப்படைப்பை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தான் புரிந்துகொள்ள முடியும்.
இதுபோல் கவுண்டமணியும்,வடிவேலுவும் பல படங்களில் தாழ்த்தப்பட்டோராக வேடமேற்றுள்ளனர், அத்தோடு அவர்களை பலரும் கண்ணத்தில் பளார்பளார் என அறைவதாகக் காட்சியும் அமைக்கப்பட்டிருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். இவ்வாறு எல்லாம் செய்வதன் மூலமாக சாதி இந்து இயக்குனர்கள் தாழ்த்தப்பட்டோர் தமிழ்ச்சமூகத்தின் கதானாயகர்கள் அல்ல், சாதி இந்து நாயகர்களின் சேவகர்கள், துதிபாடிகள், கேலிக்கும் தாக்குதலுக்கும் உரியவர்கள் என்று பொதுப்புத்தியில் உறைய வைக்க முயன்றார்கள். ஆனால் (சாதி இந்துக்) கதானாயகர்களை மட்டும் நூறு பேர் வந்தாலும் தன்னந்தனியாக நின்று பந்தாடும் வீரர்களாக நிறுவுவதற்காக சிவாஜி, கமல், ரஜினி,விஜயகாந்த், பிரபு,கார்த்திக், அஜித்,விஜய்,சூர்யா, தனுஸ், சிம்பு,விஸால் என்ற காலம் தோறும் புதிதாகவரும் முன்னணி நடிகர்களை ஆதிக்க சாதியினராக நடிக்கவைத்து அவர்கள் வில்லன்களையும் அனீதியையும், லஞ்சம்,ஊழல்,தீவிரவாதம் போன்றவற்றையெல்லாம் எதிர்த்துப் போராடி அழிப்பதாகவும், தாய்க்குலத்தின் செல்லப்பிள்ளைகளாகவும் காட்சிப்படுத்தி அவர்களை தமிழகமக்களின் வணக்கத்திற்குரிய தலைவர்களாக கட்டைமைத்தார்கள்.
இன் நடிகர்களில் 90 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோராக திரையில் தோன்றியதே இல்லை.ஆனால் முக்குலத்தோராக நடிக்காதவர் இவர்களில் எவருமில்லை. இது தற்செயலானதா? என்பதைத் தோழர்கள் சிந்தித்துப்பார்க்கவேண்டும். அதிலும் சிவாஜி,பிரபு,கார்த்திக் ஆகிய மூவரும் பல் படங்களில் (சுய சாதியினராக)முக்குலத்தோராக தோன்றியுள்ளனர். மேலும் இந்தச்சாதி இந்து இயக்குனர்கள் தாழ்த்தப்பட்ட கதாபாத்திரங்களை தங்கள் ஆழ்மன சாதிய வன்மத்தோடு இழிவாகப்படைத்தார்கள். சுருக்கம் கருதி இரு உதாரணங்கள் மட்டும்; இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது முதல்மரியாதை திரைப்படத்தில் படைத்துக்காட்டிய அருந்ததிய செங்கோடன் கதாபாத்திரம் இழிவின் உச்சமாக அமைந்தது, மலைச்சாமித்தேவர்(சிவாஜி) யின் கால்களில் ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி” என்று பலமுறை விழுந்து வணங்குவதாக காட்சிவைத்திருந்தார். இதேபோல் நல்ல (அப்புரானி) மனிதர் சேரன் தனது பாரதி கண்ணம்மா வில் அடிமைப்புத்தி கொண்ட பாரதி(பார்த்திபன்) யை கதானாயகனாகவும், சாதிய நிலப்பிரபுவை எதிர்த்துப் போரிடும் விழிப்புணர்வு பெற்ற மாயன்(ரஞ்சித்) அய் வில்லனாகக்காட்டி, மேல்சாதி நிலப்பிரபுவைக்காப்பதற்காக தனது சொந்தக்கார மாயனை பாரதி அடித்து வீழ்த்துவதாக காட்சியமைத்து தனது சாதிய நிலப்பிரபுத்துவ விசுவாசத்தைக்காட்டிகொண்டார்.
இத்தகைய அவலம் நிறைந்த தமிழ்ச்சினிமா வரலாற்றில் தான் ரஞ்சித் ஒரு முன்னணி நடிகரான கார்த்தியை காளி என்ற தலித் கதா பாத்திரமேற்க வைத்ததுடன், காளி இன்றைய அரசியலில் காணப்படுகின்ற சுய நலம், துரோகம், சூழ்ச்சி, நயவஞ்சகம், அதிகாரத்துஸ்பிரயோகம் போன்ற அனைத்திற்கும் எதிராகப் போராடி தம்மக்களை காப்பதாகவும், அவர்களுக்கு அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன் போன்றோரது கொள்கைவழிக் கல்வியை போதிப்பதாகவும் கதையையும்,காட்சியையும் அமைத்து, மெட்ராஸ் திரைப்படத்தை இன்றைய சாதிய வர்க்கத்தமிழ்ச்சமூகத்தில் வணிக ரீதியில் வெற்றியும், அதனை ஊடகங்கள் பாராட்டவும் செய்யும் விதமாக மிக நேர்த்தியாக படம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அதே சமயம் பா.ரஞ்சித்தும், மெட்ராஸ் திரைப்படமும் அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கங்களால் தொடர்ந்து பாராட்டப்படுவதாலும், முன்னிலைப்படுத்தப்படுவதாலும் சாதி இந்து விமர்சகர்களும், சாதி இந்து ஊடகங்களும் தாமதமாக விழித்துக்கொண்டு கவனிக்கத்தொடங்கியுள்ளன(ர்) இது பா.ரஞ்சித்தின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பாதிப்பாக அமையக்கூடும். ஆம், ரஞ்சித் போன்றவர்களுக்கு ஏற்படும் இடையூறு, தடை என்பது தாழ்த்தப்பட்ட மக்களது உண்மையான குரல் திரையில் ஒலிப்பதற்கு ஏற்படும் தடையேயாகும். ஏனென்றால் தமிழ்ச்சினிமாவுக்கு உள்ளே தாழ்த்தப்பட்டோருக்கு என்று பெரிய நிதி ஆதாரம் ஏதுமில்லை, மேலும் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் சாதி இந்துக்கள் கரங்களிலேயே இருக்கின்றது. மேலும் குறிப்பிட்ட சில சாதியினரே திரைத்துறையில் பெரும்பான்மையாகவும், மேலாதிக்கம் செய்யும் நிலையிலும் இருக்கின்றனர். அரசுத்துறையில் இட ஒதுக்கீடு இருப்பதுபோல் ஊடகத்துறையில்(தனியார் துறையில்) இல்லாதது ஆதிக்கசாதியினருக்கு வாய்ப்பாகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் பாதிப்புமாகும். இதுபற்றி தலித் இயக்கங்களும், நமது அறிவு ஜீவிகளும் சிந்திக்கவேண்டும்.
எனவே புறக்கணிப்பும், காயடிப்பும் ஏவப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ள சூழ்னிலையில் தனது நலனையும், வளர்ச்சியையும் மட்டும் கருதும் இயக்குனர்கள் மழுங்கியும்,மடங்கியும் போய்விடுவர். ஆகவே பா.ரஞ்சித் போன்ற அம்பேத்கரியத்தின் மீதும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் பற்றோடு இயங்குபவர்களை பாதுகாப்பதும், அவர்களது வளர்ச்சிக்கு உதவுவதும் அதன்மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பங்கை தமிழ்த்திரையுனுள் உறுதி செய்வதுமே நமதுமுன்னுள்ள உடனடிப்பிரச்சனையாகும். மெட்ராஸ் திரைப்படத்தினை விமர்சனம் செய்து கொண்டிருப்பது இப்போது நமக்கு அவசியமில்லை0
பின்குறிப்பு ;
++++++++++
மெட்ராஸ் திரைப்படம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா? அது துல்லியமாக தாழ்த்தப்பட்டோர் வாழ்வைப் பதிவு செய்துள்ளதா? என்ற கேள்விகளையெல்லாம் நாம் தவறென்று கூறவில்லை. இக்கேள்விகள் விருப்பு அல்லது வெறுப்பு என்ற இரண்டில் எந்த ஒன்றிலிருந்தும் முன்வைக்கப் படலாம். ஆனால் மெட்ராஸ் என்ன கருத்தைச்சொல்கிறது என்பதைவிட தமிழ்த்திரையுலகம் என்னவாக இருக்கிறது, அது எவ்வாறான மாற்றத்தை அடையவேண்டும் என்பதே இன்று அவசர அவசியம் என்ற நோக்கிலேயே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. மற்றபடி மெட்ராஸ் திரைப்படம் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் இக்கட்டுரையை வாசிப்பதைவிடுத்து திரைப்படதினை நேரில்சென்று பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
என்ன வகையான தமிழ்த்தேசத்தை இவர்கள் அமைக்கப்போகிறார்கள்?
தமிழர்கள் மானமும் அறிவும் பெற்ற, சுயமரியாதையுள்ள மனிதர் களாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்னாளெல்லாம் சிந்தித்த, செயல்பட்ட தந்தை பெரியாரின், திர்ரவிட இயக்கத்தின் ஓர் முக்கியச் சொல்லாடல்; பக்தி வந்தால் புத்தி போய்விடும், புத்தி வந்தால் பக்த்தி வந்தால் புத்தி போய்விடும். என்பதாகும்.
ஆனால் பெரியார் எதிர்ப்பு, திராவிட இயக்க எதிர்ப்பு ஓர் மனிதர்க்கு வந்து விட்டால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு தமிழக அரசியல் வரலாற்றில் சீமான் மட்டுமல்ல அவரால் தமிழ்த் தேசியத்தின் தந்தை, தாத்தா, பாட்டன் என்று தம் முன்னோடிகளாகப் போற்றப்படும் பலரும் அய்யாவை எதிர்த்து இந்து மதத்தின், பார்ப்பனியத்தின் காலடியில் சரணடந்ததே கடந்த கால வரலாறு ஆகும்.
சுருக்கம் கருதி ஒரே ஒரு சான்று மட்டும். சீமான் தனது நாம் தமிழர் கட்சி ஆவணத்தில் மண்ணுரிமை வழிகாட்டி என்று அடைமொழி கொடுத்து போற்றும் ம.பொ.சிவஞானம் தனது இலக்கியங்களில் இனவுணர்ச்சி என்ற நூலில் (பக்கம்22) கூறியுள்ளது:
திருவள்ளுவர், தமிழ் நாட்டிலேதான்~தமிழர் குடும்பத்தில் தான் பிறந்தார். தமிழிலேதான் திருக்குறளை இயற்றியிருக்கிறார். ............
ஆன்மாவுக்கு எழுமை எழுபிறப்பு உண்டு என்ற கருத்தும், மேலுலகம் உண்டென்ற நம்பிக்கையும் வலியுறுத்தப்படுகிறது. பாவ புண்ணியங்களும், நரகம், சொர்க்கம் ஆகியவற்றைச்சொல்லவும் வள்ளுவர் மறந்துவிடவில்லை.
இவையனைத்தும் இந்தியாவின் பூர்வகுடி மக்களான இந்துக்களின் நம்பிக்கைகள் என்பதனை மறுக்கமுடியுமா? மதப்பற்றுடன் இவ்வள வையும் கூறும் வள்ளுவருக்கு, இந்திய தேசப்பற்று இருந்திருக்கு மென்று நம்பலாந்தானே?
அடக்கொடுமையே! இறுதியில் இந்த மண்ணுரிமை( இந்திய மண்ணா? தமிழ்மண்ணா?) வழிகாட்டி திருக்குறளை இந்த்துத்துவ இலக்கிய மாகவும், திருவள்ளுவரை ஆர்.எஸ்.எஸ் தொண்டராகவும் ஆக்கிவிட்டாரே. தாத்தா ம.பொ.சி சங்க இலக்கியத்தில் இன வுணர்ச்சியைத் தேடினாரென்றால் இன்று நாம் தமிழர் பேரப்பிள் ளைகள் இன்னும் ஒரு படி மேலே சென்று முப்பாட்டன் முருகனிடம் இனவிடுதலைக்கு வழி கேட்கிறார்கள். இதுதான் இவர்களது பார்ப் பனிய தமிழ்த்தேசியத்தின் பரிணாம வளர்ச்சி.
அடுத்து தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்குச் செல்லும் போதும் சீமான், அப்பகுதியில் பெரும்பலத்துடன் வாழும் ஆதிக்க சாதியினரை போற்றிப் புகழ்ந்து உசுப்பேற்றுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார். காரைக்குடி ஜல்லிக் கட்டு ஆதரவு மானாட்டில் வேலு நாச்சியாரின் வீரத்தை போற்றியதோடு வேலு நாச்சியாரை தனது அப்பத்தா என்றார்.( சிவாஜி, பாரதி ராஜா, மணிவண்ணன் போன்றோர் அப்பாக்கள் என்றால் வேலுனாச்சி அப்பத்தா என்பது சரியான உறவு முறைதான்)
இவ்வாறு செய்வதன் மூலம் வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழக ஆதிக்க சாதியினர் அனைவரது வாக்கு
களையும் பொறுக்கத் திட்டமிடுகிறார். இதன் ஓர் அங்கம் தான் பிரன்மலைக்கள்ளர் மான்னாட்டு பங்கேற்புங்கூட. ஆனால் தேர்தலில் பங்கேற்காத தியாகுவுக்கு இம்மா நாட்டில் என்ன வேலை? விட்டகுறை, தொட்ட குறையா? ஆனால் ஒன்று மட்டும் நமக்குப் புரியவில்லை, இந்த (தமிழ்ச்) சாதிகளை யெல்லாம் (உசுப்பேத்தி) ஒன்றுகூட்டி என்ன வகையான தமிழ்த்தேசத்தை இவர்கள் அமைக்கப்போகிறார்கள்?